/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற புனித வளனார் பள்ளி முதல்வருக்கு பாராட்டு
/
கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற புனித வளனார் பள்ளி முதல்வருக்கு பாராட்டு
கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற புனித வளனார் பள்ளி முதல்வருக்கு பாராட்டு
கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற புனித வளனார் பள்ளி முதல்வருக்கு பாராட்டு
ADDED : அக் 18, 2025 07:18 AM

கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம், புனித வளனார் மேல்நிலைப்பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் டாக்டர் நசியோன் கிரகோரிக்கு தன்னலமற்ற கல்விச்சேவையை பாராட்டி அமெரிக்காவின் குளோபல் பீஸ் ஹியூமன் யூனிவர்சிட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
இதைப்பாராட்டி மேல்நிலைப்பள்ளி, பாலர் பள்ளி, இசைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து பாராட்டுவிழா நடத்தினர். விழாவிற்கு ஆரோக்கியதாஸ் தலைமை தாங்கி, டாக்டர் பட்டத்திற்கான மெடல், சான்றிதழை வழங்கினார்.
உள்விடுதி சக்கரையாஸ், உதவி தலைமையாசிரியர்கள் அன்பரசு, ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தனர். உதவித் தலைமையாசிரியர் தனசு வரவேற்றார். பாலர் பள்ளித்தலைமையாசிரியர் ஆரோன் வாழ்த்துரையாற்றினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் டாக்டர் சுரேஷ்ராஜன், வாழ்த்துமடலை வாசித்தார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர் செல்வநாதன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
விழாவில் முன்னாள் மாணவர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், பயிற்சி ஆசிரியர்கள், நகர பிரமுகர்கள், பெற்றோர், உள்விடுதிக் காப்பாளர் மைக்கேல், விடுதிக்காப்பாளர் ஆண்ட்ரூஸ் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். தமிழாசிரியர் ஜான் பிரிட்டோ நன்றி கூறினார்.