/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
15 வயது சிறுமிக்கு குழந்தை நான்கு பேர் மீது போக்சோ வழக்கு
/
15 வயது சிறுமிக்கு குழந்தை நான்கு பேர் மீது போக்சோ வழக்கு
15 வயது சிறுமிக்கு குழந்தை நான்கு பேர் மீது போக்சோ வழக்கு
15 வயது சிறுமிக்கு குழந்தை நான்கு பேர் மீது போக்சோ வழக்கு
ADDED : அக் 18, 2025 07:18 AM
கடலுார்: கடலுார் அடுத்த திருவந்திபுரத்தைச் சேர்ந்தவர் அரசன் மகன் மணிகண்டன்,26. இவர் பண்ருட்டி அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்ததனது சித்தி வீட்டிற்கு சென்ற போது, அங்கிருந்த 15வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் நெருங்கிப்பழகியதில் சிறுமி கர்ப்பமடைந்தார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் மணிகண்டனின் தாய் ஆகியோர் சேர்ந்து வரக்கால்பட்டு கிராமத்திலுள்ள ஒரு கோவிலில் சிறுமிக்கும், மணிகண்டனுக்கும் கடந்த மார்ச் 13ம் தேதி திருமணம் செய்து வைத்தனர்.
அதன்பின் இருவரும் மணிகண்டனின் வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். கர்ப்பமடைந்த சிறுமிக்கு, நேற்று மதியம் கடலுார் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து தகவலறிந்த கடலுார் அனைத்து மகளிர் போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து புகாரின் பேரில் குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ், மணிகண்டன், அவரது தாய் மற்றும் சிறுமியின் பெற்றோர் ஆகிய நான்கு பேர் மீது கடலுார் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.