/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெஞ்சல் புயல், பெருவெள்ளம் பாதிப்பு கடலுார் மாவட்டத்தில் 2ம் நாளாக மக்கள் அவதி
/
பெஞ்சல் புயல், பெருவெள்ளம் பாதிப்பு கடலுார் மாவட்டத்தில் 2ம் நாளாக மக்கள் அவதி
பெஞ்சல் புயல், பெருவெள்ளம் பாதிப்பு கடலுார் மாவட்டத்தில் 2ம் நாளாக மக்கள் அவதி
பெஞ்சல் புயல், பெருவெள்ளம் பாதிப்பு கடலுார் மாவட்டத்தில் 2ம் நாளாக மக்கள் அவதி
ADDED : டிச 04, 2024 08:32 AM

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் பெஞ்சல் புயல், பெருவெள்ளம் காரணமாக 2ம் நாளாக இயல்பு நிலை திரும்பாததால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வங்கக் கடலில் கடந்த 25ம் தேதி உருவான பெஞ்சல் புயலால், புதுச்சேரியில் 50 செ.மீ., கடலுாரில் 25 செ.மீ., மழை பெய்தது. புயல், புதுச்சேரி அருகே 30ம் தேதி கரையை கடந்தது. பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் விழுந்தன. புயல் கடந்த பாதை முழுவதும் கனமழை கொட்டியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது.
இந்த பிரச்னையில் இருந்து மக்கள் மீள்வதற்குள், கடந்த 1ம் தேதி இரவு திடுதிப்பென சாத்தனுார் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் நள்ளிரவில் கரையோர கிராமங்களில் இரைச்சலான ஓசையுடன் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து சென்றது.
போக்குவரத்து துண்டிப்பு
கடலுார் மாநகர பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு வெளிளநீர் புகுந்ததது. கலெக்டர் அலுவலகம், துணை மின் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. கடலுார்-புதுச்சேரி சாலையில் நேற்றும் தண்ணீர் ஓடியதால் நிறுத்தப்பட்ட பஸ் போக்குவரத்து துவங்கவில்லை.
இருளில் மூழ்கிய கிராமங்கள்
கடலுார் மாநகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் துண்டிக்கப்பட்ட மின்சப்ளை சீராகாததால் மக்கள் அவதிப்பட்டனர். தண்ணீர் புகுந்துள்ள கிராமங்களில் இருந்து மக்களை வெளியேற்றி அருகில் உள்ள முகாம்களில் தங்க வைத்துள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தென் பெண்ணையாற்றில் தண்ணீர் வரத்து சற்று குறைந்துள்ளது. நேற்று முன்தினம் வந்த அளவை விட நேற்று ஒரு அடி குறைந்தது. மாநகராட்சி சார்பில், மக்களுக்கு உணவு பொட்டலம், பால்பாக்கெட் வழங்கப்பட்டன.
சாலை மறியல்
சாய்ந்த மின்கம்பங்களை மின்வாரியம் சரி செய்து ஓரளவுக்கு மின்சப்ளை வழங்கியுள்ளது. இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை.
குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் மின்சாரம் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். சின்ன கங்கணாங்குப்பம் உள்ளிட்ட சில கிராமங்களில் சாலை மறியல் நடந்தது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். தகவல் பரிமாற்றத்திற்கான தொலைதொடர்பு லைன்கள் மழையால் பாதிக்கப்பட்டு முடங்கியுள்ளன.
தலைவர்கள் வருகை
தமிழக துணை முதல்வர் உதயநிதி, கடலுார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதே போல பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை, கடலுாரில் பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து ஆறுதல் கூறி, நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.