/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குண்டும், குழியுமான சாலை பேரளையூர் மக்கள் அவதி
/
குண்டும், குழியுமான சாலை பேரளையூர் மக்கள் அவதி
ADDED : அக் 09, 2025 11:31 PM

விருத்தாசலம்: பேரளையூர் ஊராட்சியில் சாலை குண்டும், குழியுமாக மாறியதால் கிராம மக்கள் அவதியடைகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த பேரளையூர் ஊராட்சியில், ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், பேரளையூர் வழியாக செல்லும் கருவேப்பிலங்குறிச்சி - ஆலந்துறைப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டது.
ஆனால், பராமரிப்பின்றி சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறின. போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையில் சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், முதியோர் விழுந்து காயமடைகின்றனர்.
மழை காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால், பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர்.
சாலையில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாவதால் டெங்கு, மலேரியா போன்ற தொற்று பாதிப்புகள் ஏற்படுகிறது.
எனவே, பேரளையூர் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.