/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலையோர புதர் வாகன ஓட்டிகள் அச்சம்
/
சாலையோர புதர் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : அக் 09, 2025 11:31 PM

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே சாலையோரங்களில் மண்டிய புதர்களை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்ணாடம் அடுத்த சின்னகொசப்பள்ளம் கைகாட்டி பஸ் நிறுத்த சாலையை பயன்படுத்தி சின்னகொசப்பள்ளம், இருளம்பட்டு கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்கு பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.
கி ராமங்களுக்கு செல்லும் சாலையில் பல இடங்களில் வளைவுகள் உள்ளன. குறுகலான இச்சாலையோரங்களில் புதர்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன.
இதனால் சாலை வளைவுகளில் இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் செல்லும்போது விபத்துகள் நிகழ்வதுடன் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். எனவே, புதர்களை அகற்ற வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.