ADDED : செப் 22, 2024 02:12 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதிக்கு, நத்தப்பட்டு துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது. வான்பாக்கம் உட்பட பல பகுதிகளுக்கு சித்தரசூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக இரண்டு பகுதிகளிலும் தினமும் பல முறை மின்தடை ஏற்படுகிறது. நகர பகுதியில் மின்தடை ஏற்படுவதால் கடுமையான வெயிலில் மக்களும், வர்த்தகர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேபோல், சித்தரசூர் துணை மின் நிலைய பகுதிகளில் விவசாய மோட்டார்களே அதிகம் உள்ளதால் மின்தடை ஏற்படுவதால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். இதுபற்றி மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது வழக்கத்திற்கு மாறாக கடுமையான வெயில் காரணமாக, மின் நுகர்வு அதிகரித்துள்ளதால் மின்தடை ஏற்படுகிறது. விரைவில் சரியாகிவிடும் என, தெரிவித்தனர்.