sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 பஞ்சரான சாலை மக்கள் அவதி

/

 பஞ்சரான சாலை மக்கள் அவதி

 பஞ்சரான சாலை மக்கள் அவதி

 பஞ்சரான சாலை மக்கள் அவதி


ADDED : பிப் 17, 2026 05:27 AM

Google News

ADDED : பிப் 17, 2026 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த நார்த்தங்குடி - சேதியூர் விளாகம் சாலை ஜல்லி பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

சேத்தியாத்தோப்பு அடுத்த நார்த்தங்குடி கிராமத்திலிருந்து தரசூர், சேதியூர், விளாகம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலை வழியாக மினி பஸ், அரசு டவுன் பஸ்கள், அவசரத்தேவைகளுக்கு செல்லும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், தனியார் பள்ளி வாகனங்கள் அதிகளவில் சென்று வருகிறது. கடந்த 5 ஆண்டிற்கு முன்பு போடப்பட்ட சாலை பழுதடைந்து ஜல்லிகள் குண்டும் குழியுமாக மாறியது.

இதனால் வாகன ஓட்டிகள், சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். இரவு நேரங்களில் அதிகளவில் பஸ் போக்குவரத்து இல்லாததால், பைக்கில் வெளியூர் சென்று திரும்பும் மக்கள் குண்டும் குழியுமான சாலையில் விழுந்து காயமடைகின்றனர்.

மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us