/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குண்டும், குழியுமான சாலை: நல்லாத்துாரில் மக்கள் அவதி
/
குண்டும், குழியுமான சாலை: நல்லாத்துாரில் மக்கள் அவதி
குண்டும், குழியுமான சாலை: நல்லாத்துாரில் மக்கள் அவதி
குண்டும், குழியுமான சாலை: நல்லாத்துாரில் மக்கள் அவதி
ADDED : அக் 22, 2025 12:35 AM
கடலுார்: நல்லாத்துார் விநாயகர் கோவில் பஸ் நிறுத்த சாலை குண்டும், குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
கடலுார் மாவட்டம், துாக்கணாம்பாக்கம் அடுத்த நல்லாத்துார் விநாயகர் கோவில் பஸ் நிறுத்தம் வழியாக தினமும், புதுச்சேரி, நெட்டப்பாக்கம், மடுகரை, வில்லியனுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான பஸ்கள், லாரிகள் செல்கின்றன. பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி.மீ., தொலைவிற்கு ஆங்காங்கே தார் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகின்றன.
இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடையும் சம்பவம் தொடர் கதையாக உள் ளது.
சாலையை அதிகாரிகள் சீரமைக்காததால், ஜல்லிகள் பெயர்ந்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்கள் பழுது ஏற்படுவதுடன் ஓட்டுனர்களுக்கு உடல்வலி ஏற்படுகிறது.
எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.