/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணையாற்று பாலத்தில் ஆபத்தை உணராமல் இறங்கும் மக்கள்
/
பெண்ணையாற்று பாலத்தில் ஆபத்தை உணராமல் இறங்கும் மக்கள்
பெண்ணையாற்று பாலத்தில் ஆபத்தை உணராமல் இறங்கும் மக்கள்
பெண்ணையாற்று பாலத்தில் ஆபத்தை உணராமல் இறங்கும் மக்கள்
ADDED : நவ 17, 2025 01:50 AM

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகம் எதிரில் கொமந்தான்மேடு தரைப்பாலத்தில் ஆபத்தை உணராமல், பொதுமக்கள் இறங்கி செல்லும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சாத்தனுார் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் கடலுார் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள கொமந்தான்மேடு பெண்ணையாற்று தரைப்பாலம் நிரம்பி தண்ணீர் வழிந்தோடுகிறது.
இதனால், பாதுகாப்பு கருதி போலீசார், போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளனர்.
இருப்பினும், கடலுார் மற்றும் அவ்வழியாக செல்லும் வெளியூர் மக்கள் ஆபத்தை உணராமல் தண்ணீர் நிரம்பி செல்லும் பாலத்தில் நின்று வேடிக்கை பார்த்து ரசிக்கின்றனர்.
குறிப்பாக, கூட்டமாக நின்று செல்பி எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். சிறுவர்கள் உள்ளிட்டோர் தண்ணீரில் விளையாடி வருகின்றனர்.
திடீரென ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் அசம்பாவித சம்பவம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் ஆற்றில் கடந்து செல்வதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

