/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுகாதார வளாகம் கட்ட மக்கள் எதிர்பார்ப்பு
/
சுகாதார வளாகம் கட்ட மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 20, 2025 07:23 AM
புதுச்சத்திரம் : பெரியப்பட்டு பஸ் நிறுத்தத்தில் சுகாதார வளாகம் கட்ட வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு பஸ் நிறுத்தத்தில் கோபாலபுரம், தச்சம்பாளையம், ஆண்டார்முள்ளிப்பள்ளம், வாண்டியாம்பள்ளம், காயல்பட்டு, சிலம்பிங்களம், தாழ்ஞ்சாவடி, அன்னப்பன்பேட்டை, சின்னாண்டிக்குழி, பெரியாண்டிக்குழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள், கூலித்தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள் கடலுார், சிதம்பரம் பகுதிகளுக்கு, பஸ் ஏறி செல்கின்றனர்.
இந்த பஸ் நிறுத்தத்தில், இயற்கை உபாதை கழிக்க, பொது சுகாதார வளாகம் இல்லை. இதனால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, சுகாதார வளாகம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.