/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்கள் மேல்நிலைப் பள்ளி வேப்பூரில் மக்கள் எதிர்பார்ப்பு
/
பெண்கள் மேல்நிலைப் பள்ளி வேப்பூரில் மக்கள் எதிர்பார்ப்பு
பெண்கள் மேல்நிலைப் பள்ளி வேப்பூரில் மக்கள் எதிர்பார்ப்பு
பெண்கள் மேல்நிலைப் பள்ளி வேப்பூரில் மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : அக் 04, 2025 06:48 AM
வேப்பூர் : வேப்பூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க கல்வித்துறை அதிகாரகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேப்பூர் காவல் நிலையம் அருகே சென்னை சர்வீஸ் சாலையில் கடந்த 1966ம் ஆண்டு அரசு உயர் நிலைப் பள்ளி துவக்கப்பட்டது. 1989ம் ஆண்டு மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
இங்கு, வேப்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
வேப்பூரில் பெண்களுக்கென தனியாக மேல்நிலைப்பள்ளி இல்லை. இதனால், மாணவிகள் 15 கி.மீ., துாரமுள்ள நல்லுார் அரசு பெண்கள் பள்ளியிலும், 5 கி.மீ., துாரமுள்ள சேப்பாக்கம் அரசு பெண்கள் பள்ளியிலும் சேர்ந்து படிக்கின்றனர்.
போக்குவரத்து வசதி இல்லாத நிலை யில், தினசரி மாணவிகள் வெகுதுாரம் பயணித்து படிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.
இதனைத் தவிர்க்க வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளுக்கென தனியாக மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது வேப்பூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.