/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா
/
கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா
ADDED : மே 09, 2025 03:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழாவில், உற்சவர் பெருமாள் கருட வாகனத்தில் அருள்பாலித்தார்.
பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. கடந்த 5ம் தேதி சந்திரபிரபை வாகனத்தில் வீதியுலா, நேற்று முன்தினம் சேஷ வாகனத்தில் வீதியுலா நடந்தது.
5ம் நாள் உற்சவமான நேற்று உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பெரிய கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 12ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.