ADDED : மே 31, 2025 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடி வசிஷ்டபுரம் அரங்கநாத பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா நாளை துவங்குகிறது.
திட்டக்குடி அடுத்த வசிஷ்டபுரம் திருமகிழ்ந்தவல்லி சமேத அரங்கநாத பெருமாள் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ திருவிழா நாளை (1ம் தேதி) காலை 5:00 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
தொடர்ந்து தினசரி காலையில் பல்லக்கில் வீதியுலாவும், இரவு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் வீதியுலா நடக்கிறது.
வரும் 9ம் தேதி காலை திருத்தேரோட்டம் நடக்கிறது. 10ம் தேதி மதியம் துவாதச ஆராதனம், புஷ்ப யாகம் நடக்கிறது. வரதசிங்காச்சாரியார் விழாவை நடத்தி வைக்கிறார். ஏற்பாடுகளை கோவில் பட்டாச்சாரியார் ராகவன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.