/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சின்ன வாய்க்காலை துார் வாரக்கோரி மனு
/
சின்ன வாய்க்காலை துார் வாரக்கோரி மனு
ADDED : டிச 08, 2024 05:16 AM
கடலுார் : கடலுார் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சின்ன வாய்க்காலை துார் வாரக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
மனு விபரம்:
கடலுார் ஒன்றியம், பாதிரிக்குப்பம் ஊராட்சி கூத்தப்பாக்கம் பகுதியில் உள்ள சின்ன வாய்க்கால், இப்பகுதியில் மழைநீர் வடிகால் வாய்க்காலாக உள்ளது. பாதிரிக்குப்பம் ஊராட்சி சார்பில், எல்லைக்குட்பட்ட கான்வென்ட் பஸ் நிறுத்தம் முதல் பள்ளிவாசல் பின்புறம் வரை துார்வாரப்பட்டுள்ளது. அங்கிருந்து திருப்பாதிரிப்புலியூர் எஸ்.எஸ்.ஆர்.,நகர் ஆர்ச் கேட் வரை துார் வாரப்படாமல் வாய்க்கால் துார்ந்து புதராக உள்ளது.
இதனால் தற்போது பெய்த கனமழையில், மழைநீர் வடியாமல் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே சின்ன வாய்க்காலை முழுமையாக துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.