ADDED : டிச 25, 2025 06:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: திட்டக்குடி கிராம மக்கள் சாலை விரிவாக்க பணியை கைவிட வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலகத்தில் திட்டக்குடி அடுத்த ஆ.பாளையம் கிராம மக்கள் அளித்த மனு:
ஆ.பாளையம் கிராமத்தின் மையப்பகுதியில் பிரதான சாலை செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், முதியோர் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.
மேலும், தற்போது, சாலை விரிவாக்க பணி நடப்பதால் குடியிருப்புகள் சேதமடையும் அபாயம் உள்ளது.
கிராமத்தின் வடக்கு பகுதியில் வெலிங்டன் நீர்த்தேக்கம், தெற்கு பகுதியில் வெள்ளாறு, மையப் பகுதியில் ஏரியும் இருப்பதால் மாற்று குடியிருப்புக்கு இடமில்லை.
அதனால், சாலை விரிவாக்க பணியை கைவிட்டு புறவழிச்சாலை அமைக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

