/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அறநிலையத்துறையை கண்டித்து பா.ஜ., மூத்த தலைவரிடம் மனு
/
அறநிலையத்துறையை கண்டித்து பா.ஜ., மூத்த தலைவரிடம் மனு
அறநிலையத்துறையை கண்டித்து பா.ஜ., மூத்த தலைவரிடம் மனு
அறநிலையத்துறையை கண்டித்து பா.ஜ., மூத்த தலைவரிடம் மனு
ADDED : அக் 21, 2024 06:49 AM

விருத்தாசலம்: இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்த பா.ஜ., எச்.ராஜாவிடம் மனு கொடுக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடல் விவசாயி சக்திவேல், சிவக்குமார் ஆகியோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: சாத்துக்கூடல் கிராமத்தில் அப்பர்சாமி மடம், கைலாசநாதர் கோவில், மாரியம்மன், விநாயகர், அய்யனார், திரவுபதி அம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன.
இந்து சமய அறநிலையத்துறையை சாரா இக்கோவில்களை, 200 ஆண்டுகளாக பாரம்பரியமாக நிர்வகித்து வருகிறோம். இந்நிலையில், அரசியல்வாதிகளை ஏவி விட்டு, இந்து சமய அறநிலையத்துறை அபகரிக்க நினைக்கிறது. மேலும், சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டும், அறநிலையத்துறை கட்டுப்படவில்லை.
எனவே, இந்து சமய அறநிலையத்துறையை கலைக்க மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். எங்கள் கோவிலை அபகரிக்க நினைக்கும் அறநிலையத்துறையை கண்டித்து, விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. அதில் பா.ஜ., சார்பில் பங்கேற்க வேண்டும்.