/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பரங்கிப்பேட்டையில் ரயில்கள் நிற்க மனு
/
பரங்கிப்பேட்டையில் ரயில்கள் நிற்க மனு
ADDED : அக் 29, 2024 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் செந்துார் மற்றும் பாமணி ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுத்தனர்.
பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்க தலைவர் அருள்முருகன் தலைமையில், கலெக்டரிடம் கொடுத்துள்ள மனு;
பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் செந்துார் மற்றும் பாமணி உள்ளிட்ட சில விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும். நடைமேடை நீளத்தை அதிகரிக்க வேண்டும்.
ரயில் நிலைய தரம் உயர்த்த வேண்டும். இந்த மனுவை, ரயில்வே துறை அமைச்சர், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.