/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வந்தே பாரத் ரயில் நின்று செல்ல மனு
/
வந்தே பாரத் ரயில் நின்று செல்ல மனு
ADDED : ஜூன் 11, 2025 07:14 AM

விருத்தாசலம்; விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷனில் வந்தே பாரத், தேஜஸ் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து பா.ஜ., முன்னாள் அகில இந்திய முதலீட்டாளர் அணி இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினருமான விருத்தாசலம் அரவிந்த், புதுடில்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து அளித்த மனு:
விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷனில் வந்தே பாரத், தேஜஸ் ரயில்கள் நின்று செல்ல வேண்டும். பெரும்பாலான ரயில்கள் இரவு நேரத்தில் செல்வதால், பகல் நேர ரயில்களில் இடமின்றி இயங்குவதால் முதியோர், மருத்துவ வசததிக்கு செல்வோர் மற்றும் வியாபாரிகள் நலன் கருதி இந்த ரயில்களை நிறுத்த வேண்டும்.
ஆன்மிக யாத்திரை செல்வோர் நேரடியாக செல்லும் வகையில் இந்த ரயில் சேவை பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்தியதற்கு நன்றி தெரிவித்தார்.