ADDED : ஏப் 21, 2025 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி வெள்ளாற்று பாலம் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து கலெக்டருக்கு, ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் குணசேகரன் அனுப்பிய மனு:
புவனகிரி வெள்ளாற்று கரை இருபுறமும் அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதனால் கழிவு நீர் கலக்கப்படுவதாலும், கடல் நீர் உட்புகுந்தும் நிலத்தடிநீர் முற்றிலும் உப்பாக மாறிவிட்டது.
வெள்ளாற்று பகுதியை ஆக்கிரமித்துள்ளவர்கள், புதிய பாலத்தின் கீழே கழிவுகளை கொட்டி, சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.