/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மனைப்பட்டா வழங்க கலெக்டருக்கு மனு
/
மனைப்பட்டா வழங்க கலெக்டருக்கு மனு
ADDED : ஜூலை 22, 2025 06:31 AM
விருத்தாசலம் : கிராம மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டுமென, கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய ஐக்கிய கம்யூ., மாவட்ட செயலாளர் கோகுலகிறி ஸ்டீபன், கலெக்டருக்கு அனுப்பிய மனு:
விருத்தாசலம் வட்டம், டி.வி.புத்துார் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச மனைப் பட்டா கேட்டு போராட்டம் நடத்தியும் இதுநாள் வரை தீர்வு காணவில்லை.
விருத்தாசலம் நகரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் 16 பேருக்கு மனைப் பட்டா வழங்கக்கோரி பரிந்துரை செய்தும், நடவடிக்கை இல்லை. கிராம மக்களுக்கு உடனடியாக மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஆக., 15ம் தேதி விருத்தாசலம் தாசில்தார் அலுவலகத்தில் கருப்புக்கொடி ஏந்தி, குடியேறும் போராட்டம் நடத்தப்படும்.