/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெள்ளாற்று பாலம் சாலையை சீரமைக்க கலெக்டரிடம் மனு
/
வெள்ளாற்று பாலம் சாலையை சீரமைக்க கலெக்டரிடம் மனு
ADDED : மார் 25, 2025 06:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை - கிள்ளை வெள்ளாற்று பாலம் சாலையை சீரமைக்க கோரி, கலெக்டரிடம் வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
பரங்கிப்பேட்டை- கிள்ளை வெள்ளாற்று பாலம் சாலை போக்குவரத்திற்கு லாயகற்ற நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, வெள்ளாற்று பாலம் சாலையை, சீரமைத்துத்தர வேண்டும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம், மாவட்ட வர்த்தக சங்க மண்டல தலைவர் சண்முகம், பரங்கிப்பேட்டை வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.