/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநகராட்சி வரி செலுத்துவோர் கமிஷனரிடம் கோரிக்கை மனு
/
மாநகராட்சி வரி செலுத்துவோர் கமிஷனரிடம் கோரிக்கை மனு
மாநகராட்சி வரி செலுத்துவோர் கமிஷனரிடம் கோரிக்கை மனு
மாநகராட்சி வரி செலுத்துவோர் கமிஷனரிடம் கோரிக்கை மனு
ADDED : டிச 31, 2024 07:03 AM
கடலுார், : மாநகராட்சியால் செயல்படுத்த முடியாத பாதாள சாக்கடை சேவை கட்டணத்தை ரத்து செய்யக்கோரி மாநகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்தனர்.
கடலுார் மாநகராட்சி வரி வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் நுகர்வோர்கள் நல சங்க தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் கொடுத்துள்ள மனு:
மாநகராட்சியால் செயல்படுத்த முடியாத பாதாள சாக்கடை சேவை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
புதியதாக போடப்படும் பாதாள சாக்கடை திட்டத்தை பழைய திட்டத்துடன் இணைக்க கூடாது.
சுகாதார குடிநீர் அனைத்து பகுதிகளிலும் வழங்க வேண்டும். மஞ்சக்குப்பம் மைதானம் குப்பை கிடங்காகவும், மது பிரியர்களின் கூடாரமாகவும் மாறி வருவதை மாற்றி துாய்மை படுத்த வேண்டும். மணிக்கூண்டுகள் அனைத்தையும் செயல்படுத்தி பராமரிக்க வேண்டும்.
அனைத்து பூங்காக்களை மக்கள் பயன்படுத்தும் வகையில் புனரமைப்பு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அப்போது, செயலாளர் பாலசுந்தரம், பொருளாளர் தண்டபாணி, துணைத் தலைவர் முகுந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.