/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலை பணியை முடிக்க துணை மேயரிடம் மனு
/
சாலை பணியை முடிக்க துணை மேயரிடம் மனு
ADDED : அக் 24, 2024 07:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் 34வது வார்டு மக்கள் சாலை பணியை விரைந்து முடிக்கக் கோரி மனு அளித்தனர்.
இதுகுறித்து கடலுார் துணை மேயர் தாமரைச்செல்வனிடம் 34வது வார்டு மக்கள் அளித்த மனு:
கடலுார் மாநகராட்சி 34வது வார்டு வள்ளி நகரில் சாலை அமைக்கும் பணிக்காக ஜல்லி கொட்டப்பட்டது. ஆனால், 5 மாதங்களாகியும் சாலை அமைக்கும் பணி நடக்கவில்லை. இதனால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, சாலை பணியை விரைந்து முடிக்கவும், பாதாள சாக்கடை கழிவுநீர் வழி்ந்தோடுவதை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

