/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துாய்மை பணியாளர்கள் கமிஷனரிடம் மனு அளிப்பு
/
துாய்மை பணியாளர்கள் கமிஷனரிடம் மனு அளிப்பு
ADDED : பிப் 02, 2025 04:59 AM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு நிர்ணயித்த ஊதியத்தை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலுார் வி.சி., முன்னாள் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன்,நகர செயலாளர் திருமாறன்,ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராஜனை சந்தித்து அளித்த மனுவில் ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு தினகூலியாக 465 ரூபாய் நிர்ணயம் செய்துள்ளது.ஆனால் நெல்லிக்குப்பம் நகராட்சியில் 300 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்குகின்றனர்.
சட்டவிரோதமாக 8 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்குகிறார்கள்.அவர்களுக்கான காப்பீடு தொகைகளை முறையாக செலுத்துவதில்லை.வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிப்பதில்லை.மாதந்தோறும் 5 ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டுமென்பதை பின்பற்றுவதில்லை.ஒப்பந்ததாரர் இவற்றை சரி செய்யாவிட்டால் அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமென கூறியுள்ளனர்.
ஒப்பந்ததாரரிடம் பேசி குறைகளை சரி செய்வதாக கமிஷனர் உறுதியளித்தார்.

