/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மருந்தாளுனர் சாவு
/
விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மருந்தாளுனர் சாவு
விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மருந்தாளுனர் சாவு
விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மருந்தாளுனர் சாவு
ADDED : பிப் 18, 2024 12:19 AM
கடலுார்: விஷம் குடித்து விட்டு, எஸ்.பி., அலுவலகத்தில் மயங்கி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிதம்பரம் அருகே வாழைக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் பூவழகன், 46; சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரிந்துவந்தர். இவர், கடந்த 12ம் தேதி இரவு கடலுார் எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்தவர் மயங்கி விழுந்தார்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் சேர்த்தனர்.
இதுகுறித்து கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், கடனை செலுத்த முடியாமல் மன உளைச்சல் ஏற்பட்டு மஞ்சக்குப்பம் மைதானத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது. இதற்கிடையே, ஜிப்மரில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.