ADDED : டிச 01, 2024 06:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை : 'பெஞ்சல்' புயல் காரணமாக நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடப்பட்டது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் வன சுற்றுலா மையம் உள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து, படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.
இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகி உள்ள 'பெஞ்சல்' புயல், மாமல்லபுரம் - காரைக்கால் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்தது. அதையொட்டி பிச்சாவரம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் காற்றுடன் மழை பெய்து வருகிறது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று பிச்சாவரம் வனச்சுற்றுலா மையம் மூடப்பட்டது. படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

