/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடல் பயணிகள் ஏமாற்றம்
/
பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடல் பயணிகள் ஏமாற்றம்
பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடல் பயணிகள் ஏமாற்றம்
பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடல் பயணிகள் ஏமாற்றம்
ADDED : டிச 01, 2025 06:26 AM

கிள்ளை: டிட்வா புயல் காரணமாக, பிச்சாவரம் வனச்சுற்றுலா மையம் இரண்டாவது நாளாக, மூடப்பட்டது.
சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வனச்சுற்றுலா மையத்தில், இயற்கை சூழலுடன் மருத்துவ குணம் கொண்ட 'சுரபுண்ணை' என்னும் மாங்குரோவ்ஸ் தாவரங்கள் நிறைந்துள்ளன.
இதனால், இங்கு உள்நாடு மற்றும் வெளி நாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து, படகு சவாரி செய்து இயற்கை அழகை கண்டுகளித்து செல்கின்றனர்.
இந்நிலையில், 'டிட்வா' புயல் காரணமாக பிச்சாவரம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாளாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
டிட்வா புயல், கரையை கடக்கும் வரை சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பிச்சாவரம் படகு குழாம் இயங்காது என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். கலெக்டரின், உத்தரவுப்படி பிச்சாவரம் சுற்றுலா மையம் கடந்த இரண்டு நாளா க மூடப்பட்டது.
படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சுற்றுலா மையம் மூடப்பட்டுள்ள தகவல் தெரியாமல், வெளியூரில் இருந்து படகு சவாரி செய்ய வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

