/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுரபுன்னை மரங்கள் நடும் பணி கடலுாரில் துவக்கி வைப்பு
/
சுரபுன்னை மரங்கள் நடும் பணி கடலுாரில் துவக்கி வைப்பு
சுரபுன்னை மரங்கள் நடும் பணி கடலுாரில் துவக்கி வைப்பு
சுரபுன்னை மரங்கள் நடும் பணி கடலுாரில் துவக்கி வைப்பு
ADDED : செப் 25, 2024 06:18 AM

கடலுார், : கடலுார் தேவனாம்பட்டினம் கடல் முகத்துவார பகுதியில், சுரபுன்னை மரங்கள் நடவு பணியை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு வனத்துறை, கடலுார் வனக்கோட்டம் சார்பில், தேவனாம்பட்டினம் முகத்துவாரம் பகுதி, அலையாத்தி காடுகள் வளர்ப்பதற்கு உகந்த இடமாக கண்டறியப்பட்டது. இப்பகுதியில் கடல் நீரும், நன்னீரும் கலந்து செல்வதற்கு ஏதுவாக வடிகால் ஏற்பாடு செய்து, உயிர் அரண் அமைத்தல் திட்டத்தின் கீழ் சுரபுன்னை மற்றும் கண்டல் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. இந்நிலையில் நேற்று 'பசுமை தமிழக தினத்தை முன்னிட்டு சுரபுன்னைமரங்கள் நடவு செய்யும் பணி நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, கமிஷனர் அனு, மாவட்ட வன அலுவலர் குருசாமி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.