ADDED : செப் 09, 2026 07:03 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் ஜெயப்பிரியா நகரில் உள்ள நகராட்சி பூங்காவில், நகர்புற பசுமையாக்கல் திட்டத்தின் கீழ், மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் அமைக்க மரக்கன்று நடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, நகராட்சி சேர்மன் சங்கவி தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டு வைத்தார். கமிஷனர் நாகராஜ் முன்னிலை வகித்தார். இதில், நகராட்சி ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், 8 அடி உயரமுள்ள மா, பலா, நாவல் உள்ளிட்ட 1,150 மரக்கன்றுகள் நடப்பட்டன.
