/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பிளாஸ்டிக் குப்பை சேகரிப்பு
/
பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பிளாஸ்டிக் குப்பை சேகரிப்பு
பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பிளாஸ்டிக் குப்பை சேகரிப்பு
பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பிளாஸ்டிக் குப்பை சேகரிப்பு
ADDED : ஜூலை 22, 2025 08:08 AM

கிள்ளை : பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், வனத்துறையினர் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து, 250 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்தனர்.
சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் உலக புகழ்பெற்ற வனச்சுற்றுலா மையம் உள்ளது.
இங்கு, பிச்சாவரம் வனச்சரகம் சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிப்பு பணி நடந்தது.
வனச்சரகர் இக்பால் தலைமையில், வனத்துறை அலுவலர்கள், சுற்றுலா படகு இல்ல ஓட்டுநர்கள், கிள்ளை எம்.ஜி.ஆர்., நகர் அரசு பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மீனவர்கள் என 70 பேர்ஒருங்கிணைந்து, பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பிச்சாவரம் வனச்சரகப் பகுதிகளில் உள்ள சுற்றுலா இல்லம், படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 250 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து, கிள்ளை பேரூராட்சி துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அழிக்கப்பட்டது.