ADDED : ஏப் 16, 2025 08:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: சின்னவடவாடி கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என மாணவர்கள், இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி, எ.வடக்குப்பம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இந்த கிராமத்தில் விளையாட்டு மைதானம் இல்லை.
இதனால், இளைஞர்கள், மாணவர்கள் தங்கள் விளையாட்டு திறனை மேம்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
வேறு வழியின்றி அருகில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு சென்று பயிற்சி மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, கிராம இளைஞர்கள், மாணவர்கள் நலன் கருதி, கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.