/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிளஸ் 1 மாணவர் தற்கொலை விருத்தாசலம் அருகே பரபரப்பு
/
பிளஸ் 1 மாணவர் தற்கொலை விருத்தாசலம் அருகே பரபரப்பு
பிளஸ் 1 மாணவர் தற்கொலை விருத்தாசலம் அருகே பரபரப்பு
பிளஸ் 1 மாணவர் தற்கொலை விருத்தாசலம் அருகே பரபரப்பு
ADDED : நவ 18, 2024 06:23 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே பிளஸ் 1 மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த பழையபட்டிணம் அம்பேத்கர் நகர், புது காலனியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சுமதி. மூன்று மகன்கள் உள்ளனர். மூத்த மகன்கள் இருவரும் ஆந்திராவில் கூலி வேலை செய்து வருகின்றனர். இளைய மகன் கணேஷ், 16, ஆலடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
கடந்த 11ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சண்முகம், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு துணையாக, மனைவிசுமதி தங்கியிருந்தார். கடந்த ஒரு வாரமாக மாணவர் கணேஷ் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை, அவரது உறவினர் மகன் ராஜகுரு சென்று பார்த்தபோது, கணேஷ் மின்விசிறியில் புடவையால் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து அவரது தந்தை சண்முகம் புகாரின் பேரில், மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு வழக்குப் பதிந்து, மாணவர் மன அழுத்தம் காரணமாக இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என, விசாரித்து வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.