/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதை மாவட்ட பள்ளிகளுக்கு பிளஸ் 2 புத்தகங்கள் 'ரெடி'
/
விருதை மாவட்ட பள்ளிகளுக்கு பிளஸ் 2 புத்தகங்கள் 'ரெடி'
விருதை மாவட்ட பள்ளிகளுக்கு பிளஸ் 2 புத்தகங்கள் 'ரெடி'
விருதை மாவட்ட பள்ளிகளுக்கு பிளஸ் 2 புத்தகங்கள் 'ரெடி'
ADDED : டிச 28, 2025 06:14 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் கல்வி மாவட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேவையான பாட புத்தகங்கள் வந்து இறங்கின.
வரும் 2026 - 27ம் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு, மாநிலம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் உள்ள 72 அரசு மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு சமச்சீர் கல்வி புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் டி.இ.ஓ., மேற்பார்வையில் அறையில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்படுகின்றன. அதன்படி, பிளஸ் 2 மாணவர்களுக்கு தமிழ், இயற்பியல் பாட புத்தகங்கள் கடந்த வாரம் வந்திறங்கின. நேற்று ஆங்கில பாடப் புத்தகங்கள் மினி லாரியில் வந்திறங்கின. அவற்றை ஊழியர்கள் பாதுகாப்பாக அடுக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். வரும் கல்வியாண்டு வகுப்புகள் துவங்கும் முன்னதாக, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பாடப் புத்தகங்கள் ஒப்படைக்கப்பட உள்ளன.

