/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிளஸ் 2 பொதுத்தேர்வு; டி.இ.ஓ., ஆய்வு
/
பிளஸ் 2 பொதுத்தேர்வு; டி.இ.ஓ., ஆய்வு
ADDED : மார் 02, 2024 06:09 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் தேர்வு மையத்தில் டி.இ.ஓ., ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் 2023 -24ம் ஆண்டிற்கான பிளஸ் ௨ பொதுத்தேர்வு நேற்று துவங்கியது.
இந்த தேர்வினை, விருத் தாசலம் கல்வி மாவட்டத்தை சேர்ந்த விருத்தாசலம், பெண்ணாடம், மங்கலம்பேட்டை, திட்டக்குடி, வேப்பூர், தொழுதுார், சிறுபாக்கம், கம்மாபுரம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 122 மையங்களில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இந்நிலையில், விருத்தாசலம் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலை பள்ளி, தொரவளூர், கருவேப்பிலங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் டி.இ.ஓ., துரைப்பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, மாணவர்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம், பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் முறையாக செய்யப்பட்டிருக்கிறதா என கேட்டறிந்தார். கல்வி துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

