/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிளஸ் 2 செய்முறை தேர்வு விருதையில் டி.இ.ஓ., ஆய்வு
/
பிளஸ் 2 செய்முறை தேர்வு விருதையில் டி.இ.ஓ., ஆய்வு
ADDED : பிப் 13, 2024 05:50 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்த செய்முறை தேர்வை, டி.இ.ஓ., துரைப்பாண்டியன் ஆய்வு செய்தார்.
பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு வரும் மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதையொட்டி, பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று செய்முறை தேர்வு துவங்கியது. இதில், கடலுார் மாவட்டத்தில் 22,108 மாணவர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்றனர். விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில், 71 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் செய்முறை தேர்வு நடந்தது. விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்த செய்முறை தேர்வை, டி.இ.ஓ., துரைப்பாண்டியன் ஆய்வு செய்தார். அப்போது, பள்ளி தலைமை ஆசிரியர் செல்வக்குமார் மற்றும் ஆசிரியர்கள் பலர் உடனிருந்தனர்.
டி.இ.ஓ., துரைப்பாண்டியன் கூறுகையில், இன்று (நேற்று) மாவட்டத்தில் உள்ள பிளஸ் 2 மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கு செய்முறை தேர்வு நடக்கிறது. வரும் 17 ம் தேதி வரை செய்முறை தேர்வு நடக்கும். அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மட்டும் 231 மாணவிள் செய்முறை தேர்வு எழுதுகின்றனர் என்றார்.