ADDED : டிச 16, 2024 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுாரில் பிளஸ் தொண்டு நிறுவனம் சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிநடந்தது.
பிளஸ் தொண்டு நிறுவன நிர்வாக செயலாளர் அந்தோணிசாமி தலைமை தாங்கி, புயலால் பாதிக்கப்பட்ட 800 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.
இதில், கீழ்அழிஞ்சிப்பட்டு, செங்கை நகர், இருளர் காலனி, கரிக்கன் நகர், புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் இருளர் குடியிருப்பு, நரிக்குறவர் குடியிருப்பு, வில்லியனுார், உறுவையாறு பகுதி மக்களுக்கு லின்சி அறக்கட்டளை உதவியுடன் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.