நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி பா.ம.க., பேரூர் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
நகர செயலாளர் கோபிநாத் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் செல்வகுமார், இளைஞர் அணி துணை செயலாளர் ஜெயசீலன், மாவட்ட ஊடகப் பேரவை இணை செயலாளர் தினேஷ் முன்னிலை வகித்தனர்.
அர்ஜுணன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்து ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் பூத் கமிட்டி அமைத்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.