ADDED : ஏப் 21, 2025 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி:
புவனகிரி ஒன்றியம், வடக்குத்திட்டையில் பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் செல்வராசு, தலைமை தாங்கி நிர்வாகிகளிடம் மாநாட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் வாசுதேவன், மாவட்ட துணைச் செயலாளர் தமிழரசன், மாவட்ட மாணவரணி ஞானவிஷ்ணு முன்னிலை வகித்தனர்.
மே 11ம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் நடக்கும் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் மாநாட்டில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இதேப் போன்று, சாத்தப்பாடி, ஆலம்பாடி, பூதவராயன்பேட்டை, குமுடிமூலை, கிருஷ்ணாபுரம், மேலமணக்குடி, மணவெளி உள்ளிட்ட பகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.