ADDED : மார் 02, 2026 03:23 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் முதுநகரில் பா.ம.க., மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
ஆனந்தராஜா, முத்துக்குமரன், சுதாகர், பிரேம் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சகாதேவன் வரவேற்றார்.
கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், விஜயகாந்தி, தட்சிணாமூர்த்தி, பொருளாளர் லதா, ரமேஷ், விஜயவர்மன், தினேஷ், தொகுதி செயலாளர் சரவணன் பங்கேற்றனர்.
பாட்டாளி வாக்குச்சாவடி திருவிழா என்ற தலைப்பில் கடலுார் மற்றும் குறிஞ்சிப்பாடி தொகுதியில் வீடு வீடாக சென்று தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது என, கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநகர அமைப்பு செயலாளர் மதி நன்றி கூறினார்.
