/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வங்கியில் லோன் வாங்கி தருவதாக மோசடி விருத்தாசலத்தில் பா.ம.க., நிர்வாகி கைது

ADDED : செப் 08, 2025 02:50 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் தனியார் வங்கியில் லோன் வாங்கி தருவதாக, பலரிடம் ரூ. 50 லட்சம் வரை மோசடி செய்த பா.ம.க., நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் பொன்னேரி புறவழிச்சாலை பகுதியை சேர்ந்தவர் மெய்கண்டநாதன், 43. எலக்ரீசியன். இவர் தனது மகள் மருத்துவ படிப்பிற்கு, பெண்ணாடம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ேஷக் தாவூத் மகன் சலீம், 30, என்பவரிடம் பணம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர், தனியார் வங்கியில் ரூ. 40 லட்சம் லோன் வாங்கி தருவதாக கூறி, கடந்த மாதம் மெய்கண்டநாதனிடம் ரூ.6.40 லட்சம் பெற்றுள்ளார். ஆனால், லோன் வாங்கி தரவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் கொடுத்த பணத்தை கேட்ட மெய்கண்டநாதனை, சலீம் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து சலீமை கைது செய்தனர்.
இதேபோல், பரவளூர் தனசேகர், 36, என்பவரிடம் ரூ.1.5 கோடி லோன் வாங்கி தருவதாக ரூ.10 லட்சம், குறிஞ்சிப்பாடி அடுத்த வானாதிபுரம் பகுதியை சேர்ந்த சேகர் என்பவரிடம் ரூ.7 லட்சம், வேப்பூர் தெற்கு தெருவை சேர்ந்த தமிழ்செல்வன், என்பவரிடம் ரூ.8.58 லட்சம் என, பலரிடம், லோன் வாங்கி தருவதாக கூறி, ரூ.50 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார். இவர் பா.ம.க.,வில், மாவட்ட இளைஞரணி தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.