/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ம.க., நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்
/
பா.ம.க., நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்
ADDED : டிச 11, 2024 04:40 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில் புவனகிரி மேற்கு ஒன்றிய பா.ம.க., நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு தனியார் மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு, புவனகிரி ஒன்றிய செயலாளர் சரண்ராஜ் தலைமை தாங்கினார். கடலுார் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமகேஷ், மாவட்ட தலைவர் தேவதாஸ் படையாண்டவர், வன்னியர் சங்க துணைத்தலைவர் செல்வராசு, உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் சங்கரநாராயணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சம்பத், மாவட்ட மாணவரணி விஷ்ணு முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய தலைவர் செல்வகணபதி வரவேற்றார். பா.ம.க., மாநில அமைப்பு தலைவர் தர்மபுரி சண்முகம், சேலம் மாவட்ட சேர்மன் ராஜசேகரன் நிர்வாகிகளுடன் கலந்துரைடியாடினார். வரும் 21ம் தேதி திருவண்ணமாலையில் நடைபெறும் உழவர் பேரியக்க மாநில மாநாட்டில் புவனகிரி ஒன்றியத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஒன்றிய செயலாளர் தலைக்குளம் சங்கர், பெரியநற்குணம் இளங்கோவன், மாணிக்கம் கலந்து கொண்டனர்.
ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஞானவேலன் நன்றி கூறினார்.

