/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க.,வினர் மிரட்டல் போலீசில் பா.ம.க., புகார்
/
தி.மு.க.,வினர் மிரட்டல் போலீசில் பா.ம.க., புகார்
ADDED : டிச 11, 2024 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : கீரப்பாளையத்தில் பா.ம.க., உழவர் பேரியக்க மாநாடு குறித்து சுவர் விளம்பரம் எழுத தி.மு.க., வினர் மிரட்டுவதாக, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில், வரும் 21ம் தேதி உழவர் பேரியக்க மாநாடு நடக்கிறது. இதற்காக கட்சியினர் பல்வேறு பகுதிகளில் சுவர் விளம்பரம் எழுதி வருகின்றனர்.
கீரப்பாளையம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பகுதியில் பா.ம.க., சுவர் விளம்பரம் எழுதியபோது, தி.மு.க., வினர் எதிர்ப்பு தெரிவித்து, மிரட்டல் விடுத்துள்னர்.
இதுகுறித்து, ஒன்றிய செயலாளர் ஹரிபுத்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், புவனகிரி போலீசில் புகார் அளித்துள்ளனர்.

