ADDED : நவ 23, 2024 06:22 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில் பா.ம.க., கடலுார் தெற்கு மாவட்ட பொதுக்குழு குழு கூட்டம் நடந்தது.
தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தேவதாஸ் படையாண்டவர், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் செல்வராசு, மகளிரணி கலைமதி, செல்வராசு, வெற்றிவேல், ஜெகன், அருள், சம்பத், வேல்முருகன், செம்பாயி முன்னிலை வகித்தனர்.
உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் சங்கரநாராயணன், நகர செயலாளர் கலைமணி வரவேற்றனர்.
வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி, உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, மாநில செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் டிச., 21ம் தேதி திருவண்ணாமலையில் நடைபெறும் உழவர் பேரியக்க மாநாட்டில் அதிகப்படியான விவசாயிகளையும், உழவர்களை அழைத்து செல்வது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய செயலாளர்கள் சரண்ராஜ், சங்கர், முருகானந்தம், பாண்டியராஜன், கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.