/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., அரசை கண்டித்து பா.ம.க., ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., அரசை கண்டித்து பா.ம.க., ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 25, 2024 08:38 AM

கடலுார் : கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில், பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
பா.ம.க., மாவட்ட செயலாளர் முத்துக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
முன்னாள் துணை பொதுச் செயலாளர்கள் தாமரைக்கண்ணன், தர்மலிங்கம், மாவட்ட தலைவர் தட்சணாமூர்த்தி, மாநில சமூக நீதி பேரவை தமிழரசன் முன்னிலை வகித்தனர். இதில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் போஸ் ராமச்சந்திரன், விஜயவர்மன், மாநகராட்சி கவுன்சிலர் சரவணன், நகர செயலாளர் ஆனந்த், நகர தலைவர் ரமேஷ் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம்
கடலுார் தெற்கு மாவட்ட பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் திலீப்ராஜன் வரவேற்றார். மாநில வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி கண்டன உரையாற்றினார். மாவட்ட தலைவர் தேவதாஸ் படையாண்டவர், மாநில செயற்குழ உறுப்பினர் சஞ்சீவி, பால்ஸ் ரவிகுமார், அருள், மாநில தொழிற்சங்க பொதுச் செயலாளர் வீரமணி, முன்னால் மாவட்ட செயலாளர் கலையரசன், மாணவரணி விஷ்ணு, அண்ணாமலை நகர் பேரூர் செயலாளர் மதன்ராஜ் ,ஒன்றிய செயலாளர்கள் கருணா, சிதம்பரம் நகர தலைவர் பழனி பங்கேற்றனர். சிதம்பரம் வடக்கு நகர செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
விருத்தாசலம்
மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். வன்னியர் சங்கத் தலைவர் சிங்காரவேல் வரவேற்றார். மாநில மகளிரணி செயலாளர் தமிழரசி, மாநில இளைஞர் சங்க செயலாளர் சுரேஷ், மாவட்ட தலைவர் கருணாநிதி, முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வராஜ், நல்லுார் ஒன்றிய சேர்மன் செல்வி ஆடியபாதம், சமூக நீதிப் பேரவை மாநில செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி சிறப்புரையாற்றினார்.
நிர்வாகிகள் மோகன், செல்வராஜ், பாட்ஷா, மாவட்ட நிர்வாகிகள் ஞானவேல், வெற்றிவேல், ராஜ், ஏழுமலை பங்கேற்றனர்.