/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ம.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம்
/
பா.ம.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம்
ADDED : ஜூன் 14, 2025 02:15 AM

கடலுார்: கடலுாரில் கிழக்கு மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் கோவிந்தசாமி, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் சகாதேவன், சுதாகர், செல்வ சோழன், செந்தில்முருகன், ஆனந்தராஜா, பிரேம்குமார், நகர செயலாளர்கள் ரமேஷ், கண்ணன், கிருஷ்ணராஜா முன்னிலை வகித்தனர்.
கடலுார் மாவட்டத்திற்கு வருகை தரும் பா.ம.க.,தலைவர் அன்புமணிக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்க வேண்டும். கிழக்கு மாவட்டத்தில் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர் தாமரைக்கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் போஸ் ராமச்சந்திரன், சமூகநீதி பேரவை காப்பாளர் தமிழரசன், நிர்வாகிகள் சந்திரகாசு, ஆறுமுகம், தனசேகர், பசுமைத்தாயகம் மாவட்ட தலைவர் சரவணன், இளைஞர் சங்க துணை செயலாளர் விஜயபிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.
ஒன்றிய தலைவர் தினேஷ் நன்றி கூறினார்.