/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலத்தில் நாளை பா.ம.க., வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம்
/
விருத்தாசலத்தில் நாளை பா.ம.க., வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம்
விருத்தாசலத்தில் நாளை பா.ம.க., வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம்
விருத்தாசலத்தில் நாளை பா.ம.க., வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : ஜூலை 10, 2025 12:36 PM
சேத்தியாத்தோப்பு: பாட்டாளி மக்கள் கட்சியின் கடலுார் மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ். மாவட்ட தலைவர் செல்வராசு ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:
கடலுார் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம் நாளை 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் விருத்தாசலம் பொன்னேரி பைபாஸ் சாலை ராணி திருமண மகாலில் நடைபெற உள்ளது.
பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், கவுரவத் தலைவர் மணி, வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி, மாநில பொதுச்செயலாளர் முரளிசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசுகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் , மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ஒன்றிய , கிளை நிர்வாகிகள், செயல்வீரர்கள், தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.