/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் பா.ம.க., செயற்குழு கூட்டம்: புதிய செயல்தலைவர் ஸ்ரீகாந்தி பங்கேற்பு

ADDED : அக் 28, 2025 06:23 AM

-நமது நிருபர்-
கடலுாரில் நடைபெறும் பா.ம.க., மாவட்ட செயற்குழு கூட்டத்தில், புதிய செயல் தலைவர் ஸ்ரீகாந்தி பரசுராமன் பங்கேற்கிறார்.
தமிழகம் முழுதும் வரும் நவ., 1ம் தேதி 36 இடங்களில் பா.ம.க., ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் நடக்கிறது. நிறுவனத் தலைவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், சென்னையில் 16 சட்டசபை தொகுதிகள் அடங்கிய மாவட்ட செயற்குழு கூட்டம், கவுரவ தலைவர் மணி தலைமையில் நடைபெற உள்ளது.
கடலுாரில் நடைபெறும் கூட்டத்தில், பா.ம.க., புதிய செயல் தலைவர் ஸ்ரீகாந்தி பரசுராமன், மாநில மகளிர் சங்க தலைவி சுஜாதா கருணாகரன் பங்கேற்கின்றனர்.
விழுப்புரத்தில் மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர், மாநில மாணவர் சங்க செயலாளர் தலீப் பிரபாகர் தாஸ் மற்றும் கள்ளக்குறிச்சியில் மாநில பொருளாளர் சையத் மன்சூர் உசேன், மாநில அமைப்பு துணைச் செயலாளர் சுவிஜி சரவணகுமார் ஆகியோர் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
புதுச்சேரியில் பா.ம.க., தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாநில மகளிர் சங்க செயலாளர் வழக்கறிஞர் ரஞ்சனா தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது என, தெரிவிக்கப்பட் டுள்ளது.