/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு போக்சோ
/
சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு போக்சோ
ADDED : மே 21, 2025 11:37 PM
நடுவீரப்பட்டு: பண்ருட்டி அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.
பண்ருட்டி அடுத்த பணப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம் மகன் வினோத்குமார்,21; இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்தனர்.
இதற்கு சிறுமியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்தால், இருவரும் திருமணம் திருமணம் செய்து கொண்டனர்.
சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்கு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக உள்ளதால்,பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் போலீசார் வினோத்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.