/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் வியாபாரி சந்தேக மரணம் விபத்து என போலீசார் முடிவு
/
கடலுார் வியாபாரி சந்தேக மரணம் விபத்து என போலீசார் முடிவு
கடலுார் வியாபாரி சந்தேக மரணம் விபத்து என போலீசார் முடிவு
கடலுார் வியாபாரி சந்தேக மரணம் விபத்து என போலீசார் முடிவு
ADDED : ஜன 03, 2025 07:17 AM
கடலுார்; கடலுாரில் ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளர் சந்தேகமான முறையில் கடையில் இறந்து கிடந்த வழக்கில், எதிர்பாராத விபத்தால் அவர் இறந்திருக்கலாம் என போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் தேவிசந்த் மகன் ராஜேந்திரகுமார், 39. இவர் கடந்த டிச.12ம் தேதி, அவருடைய ஹார்டுவேர்ஸ் கடையில் கழுத்து அறுபட்ட நிலையில், இறந்து கிடந்தார். அருகில், கட்டிங் செய்யும் மெஷின் கிடந்தது. திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
இந்நிலையில், ராஜேந்திரகுமார் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது.
போலீசார் கடை ஊழியர்களிடம் விசாரித்தும், சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தும், ராஜேந்திரகுமார் இறந்ததற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. தடயங்கள் எதுவும் கிடைக்காததால், இவ்வழக்கில் முன்னேற்றம் இல்லாமல் போலீசார் திணறி வந்தனர்.
போலீசாரின் தொடர் விசாரணையில், ராஜேந்திரகுமார் இறந்த நேரத்தில் அவர் மட்டுமே கடையில் இருந்துள்ளார்.
வெளியே இருந்து யாரும் உள்ளே செல்லவில்லை, உள்ளே இருந்தும் யாரும் வெளியேறவில்லை என்பதை சி.சி.டி.வி., பதிவுகளின் அடிப்படையில் உறுதி செய்துள்ளனர்.
இதனால் பைப் கட்டிங் செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மெஷினில் கழுத்து அறுபட்டு இறந்திருக்க வேண்டும் என போலீஸ் தரப்பில் முடிவு செய்துள்ளனர்.

