/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூடுதல் கட்டட வசதி; போலீசார் எதிர்பார்ப்பு
/
கூடுதல் கட்டட வசதி; போலீசார் எதிர்பார்ப்பு
ADDED : செப் 03, 2025 08:49 AM
நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கூடுதல் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் நடுவீரப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் கூடுதல் பொறுப்பு பதவி வகித்து வந்தனர். இந்நிலையில், நடுவீரப்பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு தனியாக இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கு, 2 சப் இன்ஸ்பெக்டர்கள், 2 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிகின்றனர். ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் அறை ஒன்றும், ஆவணங்கள் பாதுகாப்பு அறை, கணினி அறை என உள்ளது.
ஆனால், சப் இன்ஸ்பெக்டர்களுக்கு என, தனியாக அறைகள் இல்லாததால், வழக்குகளை விசாரிக்க சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, கூடுதல் கட்ட வசதி ஏற்படுத்த காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.